ETV Bharat / state

'வதந்திகளை நம்பாதீர்கள்... தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்' - அமைச்சர் அறிவுரை - corona vaccine

தடுப்பூசி போட்டதால்தான் கரோனா தாக்கியபோது தான் உயிர்ப் பிழைத்ததாகவும் வதந்திகளை நம்பாமல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் திமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.

dmk duraimurugan
வதந்திகளை நம்பாதீர்கள்...தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் - அமைச்சர் அறிவுரை
author img

By

Published : May 26, 2021, 5:54 PM IST

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மக்கள் காய்கறிகளைப் பெற ஏதுவாக 700 வாகனங்களின் மூலம் காய்கறிகள் விற்பனையை அமைச்சர் துரைமுருகன் இன்று(மே 26) ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து வாணியர் வீதியின் ஜெயின் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட தடுப்பூசி முகாமை அவர் பார்வையிட்டார். அங்கு அவர் பேசுகையில், "18 வயதுக்கும் மேற்பட்டோர்களுக்குத் தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கப்பட்டுளள்ளது. இம்மாவட்டத்தில் 10 லட்சத்து 74 ஆயிரத்து 54 பேர் தடுப்பூசி போடுவதற்குத் தகுதியானவர்களாக உள்ளனர்.

'வதந்திகளை நம்பாதீர்கள்... தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்'

அவர்களில் இதுவரை 1 லட்சத்து 93 ஆயிரத்து 915 பேர்தான் தடுப்பூசி எடுத்துள்ளனர். பொதுமக்கள் பலர் அரசு வழங்கும் இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதனை செலுத்திக்கொண்டால் உயிர்போய்விடும் என அச்சப்படுகின்றனர். அது தவறானது. நானே இரண்டு தவணை தடுப்பூசி போட்டதால் தான், மீண்டும் என்னை கரோனா தாக்கிய போதும் உயிர்ப் பிழைத்தேன்.

அமெரிக்கா,ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் கரோனாவுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் கரோனாவை அந்த நாடுகள் வெற்றிகொண்டுள்ளன. ஆனால், இங்கே தவறான தகவலால் தடுப்பூசி போட்டுக்கொள்ள அஞ்சுகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்டு உங்களையும் சமுதாயத்தையும் காத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் கரோனாவை நாம் முழுமையாக ஒழிக்க முடியும்" என்றார்.

இந்நிகழ்வைத் தொடர்ந்து காட்பாடியில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 200 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சித்த மருத்துவ முகாமை அவர் திறந்துவைத்தார்.

இதையும் படிங்க: "தடுப்பூசி போட்டதால்தான் தப்பித்தேன்" துரைமுருகனின் அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.