ETV Bharat / state

"கவர்னர் எதிர்க்கட்சித் தலைவரை போல் செயல்படுகிறார்" - அமைச்சர் துரைமுருகன்! - வேலூர்

Minister Durai Murugan speech: தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என் ரவி எதிர்க்கட்சித் தலைவரை போல் செயல்படுகிறார் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Minister Durai Murugan speech
அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 30, 2023, 2:32 PM IST

தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்: காட்பாடியில் உள்ள கழிஞ்சூர் ஏரி மற்றும் தாராபடவேடு ஏரி ஆகிய இரண்டு ஏரிகளையும் சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அதனை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த ஆய்வில் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் மற்றும் மண்டல குழுதலைவர் புஷ்பலதா, நீர் வளத்துறை அதிகாரி சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அப்போது தாராபடவேடு ஏரியில் அதிக அளவு குப்பைகள் இருந்ததாகவும், அதனை அகற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு அமைச்சர் துரைமுருகன் மேயரை பார்த்து உங்கள் மாநகராட்சி ஆட்கள் தான் இவ்வளவு குப்பை கொட்டிவிட்டு சென்றனர் என சொன்ன போது சிரிப்பை அடக்க முடியாமல் மேயர் சுஜாதா சிரித்தார்.

முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "ஏரியை சுற்றுலாதளமாக மாற்றுவதற்கான பணிகள் சற்று வேகம் குறைவாக உள்ளது. இன்னும் வேகமாக பணிகள் நடக்க வேண்டும். மழை காலத்திற்கு முன்பு பணிகளை முடிக்க வேண்டும். நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம் தொடர்ந்து நடந்து வருகிறது.

காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்கிறது, அதில் வழக்கம் போல் என்ன வலியுறுத்தியுள்ளோம்!... பாக்கி தண்ணீரை தர கேட்போம். தமிழக ஆளுநர் ஒரு மாநிலத்தின் கவர்னர். ஆளுநர் என அவருக்கு பெயர் உள்ளது. ஆனால் அவர் எங்களுக்கு எதிர் கட்சியைப் போல் நடக்கிறார், கவர்னராக நடக்கவில்லை. எதிர் கட்சி தலைவராக நடக்கிறார்.

பாஜக குழு அமைத்து பொய் வழக்கில் 450 பாஜகவினரை கைது செய்துள்ளதாகவும், திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பாஜகவினர் தெரிவித்துள்ளது குறித்து கேட்டதற்கு, தாரளமாக... அவர்களுக்கு அதிகாரம் உள்ளது, ஆகையால் செய்வார்கள், நாங்கள் போட்ட வழக்குகள் சரி என்றால், சரி என சொல்வோம்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: லியோ வெற்றி கொண்டாட்டத்திற்கு காவல்துறை கட்டுப்பாடுகளுடன் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.