குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்கள் தீவிரமாக போராடத் தொடங்கியுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும் இச்சட்டத்திற்கு எதிராக போராடிய ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கிய டெல்லி காவலர்களை கண்டித்தும் திருப்பத்தூர் மஜ்ஹருல் உலூம் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் வாணியம்படி பகுதியல் உள்ள இஸ்லாமியா கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் கடலூர் கந்தசாமி நாயுடு கல்லூரி மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். தேவனாம்பட்டியில் அரசு பெரியார் கலை கல்லூரி மாணவர்கள் இரண்டாவது நாளாக இச்சட்டத்திற்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய அமைப்பினர் பிரமாண்ட ஆர்ப்பாட்டம்