திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த ஷ்யாம் சுந்தர் (55), நாகலாந்து மாநிலத்தைச் சேர்ந்த குழுதிப் ஷர்மா (28) ஆகிய இருவர் லாரியை ஓட்டிவந்துள்ளனர். அவர்கள் லாரியை நாட்றம்பள்ளி பாரதிதாசன் கல்லூரி அருகே உள்ள உணவகத்தின் வெளியே நிறுத்திவிட்டு சாப்பிடுவதற்கு உள்ளே சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென்று தானாக லாரி தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர், துரிதமாகச் செயல்பட்டு தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்ததால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் லாரியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம், 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாகனம் இயக்கும் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.
தற்போது, நாட்றம்பள்ளி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தெலங்கானா பெண் மருத்துவர் எரித்துக் கொலை எதிரொலி: பெட்ரோல் இனி பாட்டில்களில் வழங்கப்படாது!