வேலூர்: பள்ளிகொண்டா அடுத்த கீழ் வெட்டுவானம் பகுதியை சேர்ந்தவர் நந்தா (எ) முத்துக்குமார். இவர் பணத்துக்காக அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கடந்த 2018ஆம் ஆண்டு கொலை செய்த வழக்கில் பள்ளிகொண்டா காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று (பிப்.21) காலை மத்திய சிறைக்கு எதிரே உள்ள சிறைத்துறைக்கு சொந்தமான கட்டடத்தை மீட்டிங் வளாகமாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சுத்தம் செய்யும் பணியில் சிறையில் உள்ள ஆயுள் தண்டறை கைதிகள் 21 பேரை சிறை காவலர்கள் ஈடுபடுத்தியுள்ளனர்.
கைதி தப்பியோட்டம்
மத்திய உணவு இடைவேளையின் போது கைதிகளை காவலர்கள் எண்ணிப்பார்க்கும் போது 20 பேர் மட்டுமே இருந்துள்ளனர். 21ஆவது நபரான நந்தா காணவில்லை என்பது தெரியவந்தது. அங்குள்ள சுற்றுவட்டார பகுதியில் தேடியும் நந்தா கிடைக்காததால் அவர் தப்பியிருக்கலாம் என்ற கோணத்தில் சிறை காவலர்கள் அவரை தேடி வருகின்றனர்.
மேலும், தப்பியோடிய கைதி நந்தாவுடன் இருந்த சக கைதிகள் 20 பேரிடம் சிறை காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஸ்வீட் கடையில் தீ விபத்து: லட்சக்கணக்கான பொருள்கள் நாசம்