ராணிப்பேட்டை மாவட்டம், வாழைப்பந்தல் அடுத்த அக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம்(75). இவரது பேரன் முருகன். இவர்களுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜி(28), பாபு(37), சோமு(45), மற்றும் பாபு(36) ஆகிய நால்வருக்கும் முன்விரோதம் காரணமாக கடந்த 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் முனிரத்தினத்தை நான்கு பேரும் கற்களால் தாக்கி, கொலை செய்தனர்.
இந்த வழக்கில் பாபு, ராஜி, சோமு, பாபு ஆகிய நால்வரும் முக்கியக் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்குத் தொடர்பான விசாரணை ராணிப்பேட்டை 2ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. 9 ஆண்டுகள் கழித்து இன்று (நவ. 30) இவ்வழக்கிற்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் கொலை செய்தது உறுதியானதையடுத்து, மாவட்ட கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிபதி ஸ்ரீனிவாசன், அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தொடர்ந்து, ஒவ்வொருவருக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், அதைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவில் வெடிக்கும் உட்கட்சி பூசல் - நிர்வாகி மீது எம்எல்ஏ சரமாரி குற்றச்சாட்டு!