ETV Bharat / state

"பறவைகள் இல்லா உலகில் மனிதர்கள் வாழ முடியாது": 40 இடங்களில் நில வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி! - ஈடிவி பாரத் தமிழ்

வேலூர் வனக்கோட்டத்தில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பு சுமார் 40 இடங்களில் நடைபெற்றது. இந்த கணக்கெடுப்பை வன ஊழியர்கள், பறவைகள் ஆர்வலர்கள் இணைந்து மேற்கொண்டனர்.

40 இடங்களில் நில வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

author img

By

Published : Mar 7, 2023, 3:40 PM IST

வேலூர்: தமிழ்நாடு வனத்துறை சார்பில் ஆண்டு தோறும் ஈர நிலபரப்பில் வாழும் பறவைகள் மற்றும் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து நடப்பாண்டில், ஈரநிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த ஜனவரி 28, 29ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.

நில வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி
நில வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி

இந்த கணக்கெடுப்பைத் தொடர்ந்து, மாநில அளவில் நிலப்பரப்பில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு வனத்துறை சார்பில் ஞாயிற்றுக் கிழமை நடத்தப்பட்டது. வேலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா 20 இடங்கள் என மொத்தம் 40 இடங்களில் இக்கணக்கெடுப்பு நடைபெற்றது.

நில வாழ் பறவைகள்
நில வாழ் பறவைகள்

ஒவ்வொரு இடங்களில் பறவைகள் குறித்து விவரங்கள் அறிந்த பறவை ஆர்வலர்கள், சுமார் 3 வன ஊழியர்கள் என 40 இடங்களிலும் சேர்த்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்பை நடத்தினர். அப்போது, காப்புக்காடு, ஊர்ப்புறங்களில் காணும் பறவைகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்தும், வீடியோவாகப் பதிவு செய்து கணக்கிட்டனர்.

மேலும் காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த கணக்கெடுப்புப் பணி காலை 9 மணி வரை நடைபெற்றது. பின்னர் இதன் முடிவை வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பறவைகள் மனித இனத்திற்காக மரங்களின் விதைகளை பரப்பும் அற்புதச் செயலை மேற்கொள்கின்றன.

பறவைகளும், விலங்குகளும் இல்லாத உலகில், மனிதன் ஒருபோதும் உயிர் வாழ முடியாது

இன்னும் சொல்ல வேண்டுமானால், உண்மையில் அவை தனக்கு உணவையும் உறைவிடத்தையும் தரும் மரங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் விதைகளை எச்சம் மூலம் பரப்புகின்றன. "மனிதன் இல்லாத உலகில் பறவைகளும், விலங்குகளும் உயிர் வாழும். பறவைகளும், விலங்குகளும் இல்லாத உலகில், மனிதன் ஒருபோதும் உயிர் வாழ முடியாது" என்று பறவை ஆராய்ச்சியாளர் சலீம் அலி கூறியது நிதர்சன உண்மை.

இதையும் படிங்க: "அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை" - மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த காட்டு யானைகளின் கடைசி நிமிடங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.