ETV Bharat / state

23 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் - வேலூர் சரக டிஜஜி உத்தரவு! - inspectors

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை சரகத்தில் 23 காவல் ஆய்வாளர்கள் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர், எங்கு  பணிபுரிந்தார்களோ தற்போது மீண்டும் அந்த இடத்திற்கே  மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

வேலூர் சரக டிஜஜி உத்தரவு
author img

By

Published : Jun 22, 2019, 7:06 AM IST

வேலூர் சரக டிஐஜியாக இருந்து வரும் வனிதா, 23 காவல் ஆய்வாளர்களை அதிரடியாக மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை அரக்கோணம் தாலுக்கா காவல் நிலையத்திற்கும், வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகுராணி வேலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் பத்மாவதி திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் காவல் நிலையத்திற்கும் என 23 ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர் மக்களவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர், தற்போது மாற்றம் செய்யப்பட்ட இடத்திலேயே ஆய்வாளர்களாக பணிபுரிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாகத் தேர்தல் நேரங்களில் காவல் ஆய்வாளர்கள் மாற்றப்படுவார்கள் பின்னர் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் பழைய இடத்திற்கே பணியமர்த்தப்படுவார்கள் அந்த வகையில் தற்போது வேலூர் மற்றும் திருவண்ணாமலை சரகத்தில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Intro:வேலூர் திருவண்ணாமலை சரகத்தில் 23 காவல் ஆய்வாளர்கள் அதிரடி மாற்றம் வேலூர் சரக டிஐஜி வனிதா உத்தரவுBody:வேலூர் மற்றும் திருவண்ணாமலை சரகத்தில் பணிபுரிந்து வரும் 23 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி வனிதா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார் அவர் பிறப்பித்த உத்தரவில், " வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்துக்கும் வேலூர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் அழகுராணி வேலூர் மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் வேலூர் மாவட்ட தீவிர குற்றப்பிரிவு ஆய்வாளர் பத்மாவதி திருவண்ணாமலை மாவட்டம் மேல்செங்கம் காவல் நிலையத்திற்கும் வேலூர் மாவட்டம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மகளிர் காவல் நிலையத்திற்கும் வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புனிதா திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மகளிர் காவல் நிலையத்திற்கும் வேலூர் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மகளிர் காவல் நிலையத்திற்கும் திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் காவல் ஆய்வாளர் சசிகுமார் வேலூர் மாவட்ட வாணியம்பாடி காவல் நிலையத்துக்கும் திருவண்ணாமலை மாவட்டம் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் வேலூர் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கும் திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் காவல் நிலைய ஆய்வாளர் நாகராஜன் வேலூர் வடக்கு காவல் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர் அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் முரளிதரன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் நிலையத்திற்கும் திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் காவல் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா காவல் நிலையத்திற்கும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாரதி வேலூர் மாவட்டம் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் ரேகாமதி திருவண்ணாமலை மாவட்ட அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா வேலூர் மாவட்டம் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் புஷ்பலதா வேலூர் மாவட்ட தீவிர குற்றப் பிரிவுக்கும் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மைதிலி வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் காவல் நிலையத்திற்கும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அபர்ணா திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மகளிர் காவல் நிலையத்திற்கும் வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் அமுதா திருவண்ணாமலை மாவட்டம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும் வேலூர் மாவட்டம் வேலூர் வடக்கு காவல் ஆய்வாளர் திருமால் வேலூர் மாவட்டம் நிலத்தடுப்பு சிறப்பு பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர் அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் வேலூர் தெற்கு காவல் நிலையத்திற்கும் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் நிலைய ஆய்வாளர் செங்குட்டுவன் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு காவல் நிலையத்திற்கும் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆய்வாளர் தனலட்சுமி திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் காவல் நிலையத்திற்கும் வேலூர் மாவட்ட நில தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் முரளிதரன் திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் இவர்களில் பெரும்பாலானோர் பாராளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் தற்போது மாற்றம் செய்யப்பட்ட இடத்திலேயே பணிபுரிந்து வந்த்து குறிப்பிடத்தக்கது வழக்கமாக தேர்தல் நேரங்களில் காவல் ஆய்வாளர்கள் மாற்றப்படுவார்கள் பின்னர் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் பழைய இடத்திற்கே பணியமர்த்தப்படுவார்கள் அந்த வகையில் தற்போது வேலூர் மற்றும் திருவண்ணாமலை சரகத்தில் காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.