வேலூர்: காஞ்சிபுரம், சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பிரபல பச்சையப்பாஸ் துணிக்கடைகள் உள்ளன. இங்கு வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் இன்று (அக்.5) சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காட்பாடி சாலையில் உள்ள பச்சையப்பாஸ் துணி கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
துணிக்கடையில் ரெய்டு
இதனால் காலை முதல் கடையின் ஷட்டர் பூட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜவுளி எடுக்க வந்த பொதுமக்கள் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: லக்கிம்பூர் விவசாயிகள் மீது கார் ஏறிய அதிர்ச்சி காட்சி!