வேலூர்: ஜூலை 25ஆம் தேதி ஈடிவி பாரத், வேலூரில் பாதாள சாக்கடைகளின் மூடி சரிவர மூடாமல் இருப்பதாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாக செய்தி வெளியிட்டிருந்தது. இதன் எதிரொலியாக தற்போது மூடாமல் கிடந்த பாதாள சாக்கடையின் மூடும் பணியை வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈடிவி பாரத் வெளியிட்ட செய்தியில், வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்னும் வரையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும். அவ்வப்போது பாதாளச் சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை நீக்க ஆங்காங்கே இடைவெளி விடப்பட்டு இருப்பதாகவும்.
சமீபகாலமாக மாநகரப் பகுதிகளில் பாதாள சாக்கடைத் திட்டம் முறையான பராமரிப்பின்றி மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும். குறிப்பாக, ஒரு சில இடங்களில் பராமரிப்புப் பணிக்காக திறக்கப்படும் பாதாள சாக்கடையின் மூடிகள் சரிவர மூடப்படாமல், திறந்த நிலையில் விட்டுவிடுபடுவதாகவும். இதனால், அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுவதாகவும் என்று பொதுமக்கள் தெரிவித்திதாகவும் வெளியிடப்பட்டு இருந்தது.
மேலும் இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும் போது, சாலையில் தேங்கி இருக்கும் மழை வெள்ளத்தை விட, அந்த மழைநீரில் மறைந்திருக்கும் பாதாளச் சாக்கடையின் பள்ளம் குறித்த அச்சம்தான் அதிகமாக ஏற்படுகிறது என்று தெரிவித்தனர். பாதாளச் சாக்கடையை சுத்தம் செய்வதற்காக அதைத் திறக்கும் ஊழியர்கள், அதனை முறையாக மூடாமலும், அதைச்சுற்றி சிமென்ட் கலவை பூசாமலும் அப்படியே விட்டு விடுகின்றனர். இதனால் அந்த இடங்களில் பள்ளங்கள் ஏற்படுகின்றன என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: வேலூரில் மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை!
தினமும் ஆயிரக்கணக்கானோர் செல்லும் நகரச் சாலைகளில் இந்த பள்ளங்களை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும். ஒரே நாளில் சரிசெய்யக் கூடிய சாதாரண சீரமைபு பணியை கூட செய்யாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாகவும், பாதாள சாக்கடை மூடியை திறந்து பணி செய்யும் ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்
குறிப்பாக பள்ளங்கள் உள்ளதா, பாதாளச் சாக்கடையின் மூடி சரியாக இருக்கிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்ததாக செய்தி பகிரப்பட்டது. மேலும் தற்போது அந்த செய்தியின் எதிரொலியாக வேலூர் மாநகராட்சியின் பல்வேறு இடங்களில் மூடப்படாத பாதாள சாக்கடைகள் தற்போது மூடப்பட்டு, அதை சுற்றி சிமெண்ட் பூசப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 41 குடும்பங்களை உள்ளடக்கிய வீடுகள் இடிக்கும் பணி தொடங்கியது - பொதுமக்கள் போராட்டம்!