திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மணியார் குப்பம், மோட்டூர், சின்னபள்ளிக்குப்பம், மேல் சான்றோர் குப்பம் ஆகிய கிராமங்களில் பகலிரவு பாராமல் வயல் வெளிகளிலும் வீடுகளிலும் கள்ளச்சாராய விற்பனை செய்து வருவதாக பலமுறை அலுவலர்களுக்குப் புகார் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், காவல் துறை தரப்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
உமராபாத் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளான இக்கிராமத்தில் பெண்களே கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வாட்ஸ்அப்பில் வைரலாகி வருவதால், இவர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வாணியம்பாடி மது விலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் ஆகியோர் தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: சோளிங்கரில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு