ETV Bharat / state

"பாடி பில்டிங் செய்தால் ஒழுக்கம் தானாக வரும்" 'ஐ' பட புகழ் காமராஜ் அறிவுரை!

இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போதையில் இருந்து விடுபட உடற்பயிற்சி செய்யுங்கள் என 'ஐ' பட புகழ் உலக ஆணழகன் காமராஜ் அறிவுரை வழங்கியுள்ளார்.

'ஐ' பட புகழ் காமராஜ் அட்வைஸ்
'ஐ' பட புகழ் காமராஜ் அட்வைஸ்
author img

By

Published : Jan 30, 2023, 2:30 PM IST

'ஐ' பட புகழ் காமராஜ் அட்வைஸ்

வேலூர்: காட்பாடியில் அகில இந்திய ஆணழகன் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், மாநிலங்களிலிருந்து பலர் கலந்து கொண்டனர். அதில் சிறப்பானவர்களைத் தேர்ந்தெடுத்து முதல், இரண்டாம், மூன்றாம் என்ற அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு மாவட்ட வீரர்களை வென்று சாம்பியன் ஆப் த சாம்பியன் என்ற பட்டத்தைக் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜியோ என்கின்ற ஆணழகன் தட்டிச் சென்றார்.

அவருக்கு பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனம் பரிசாகவும் மற்றும் பண மதிப்பும் வழங்கப்பட்டது. அவருக்குக் கேடயம் மற்றும் பரிசினை வழங்கி பேசிய 'ஐ' பட புகழ் உலக ஆணழகன் காமராஜ் பேசும் போது, “பாடி பில்டிங் நமது உடலை அழகு படுத்துவதற்கு மட்டுமல்ல. வேலைவாய்ப்பினையும் உருவாக்கித் தரும்.

நமது நாட்டில் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு நிறைந்து காணப்படுகிறது. இதையும் ஒரு படிப்பாக நினைத்து செயல்படுத்துங்கள் உங்களுக்கு வேலை வாய்ப்பு நிச்சயம். அப்படி தான் நான் ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவுடன் எனக்கும் ராணுவத்தில் வேலை கிடைத்தது.

பாடி பில்டிங் செய்யும் பொழுது ஒழுக்கம் தன்னால் வரும். ஆகவே அனைவரும் பாடி பில்டிங் செய்யுங்கள் குறைந்தது ஒரு நாளைக்கு 40 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வதற்காக ஒதுக்குங்கள். உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று அங்கு உங்கள் உடலை அழகாக்கிக் கொள்ளுங்கள்.

தற்போது உள்ள இளைஞர்கள் மாணவர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் மூழ்கி விடுகிறார்கள். மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் கூட ஒரு இரண்டு மணி நேரத்தில் போதை தெளிந்து, எழுந்து சாதாரண மனநிலைக்கு வந்து விடுவார்கள். ஆனால் இன்ஸ்டாகிராம் போதை என்பது அதிலேயே அவர்களை மூழ்கடித்து விடுகிறது.

அவற்றிலிருந்து விடுபடுவது மிகவும் கடினம் ஆகி விடுகிறது. அவற்றிலிருந்து விடுபட உடற்பயிற்சி செய்யுங்கள். என்று கேட்டுக் கொண்டார். வெற்றி பெற்ற ஜியோ கூறும் பொழுது எனது வெற்றிக்கு பின் எனது மனைவி மிகவும் உறுதுணையாக இருந்தார்.. என்னுடைய உணவு கட்டுப்பாடு ஆகியவற்றை அவர்தான் பார்த்துக் கொண்டார்.. தான் பெற்ற வெற்றியை தன் மனைவிக்குச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரசிகர் மன்ற நிர்வாகி உயிரிழப்பு - நடிகர் கார்த்தி நேரில் சென்று அஞ்சலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.