ETV Bharat / state

என்னால் 30,000 இலவச வீடுகள் கட்டித்தர முடியும் - ஏ.சி. சண்முகம் - பிரதமர் மோடி

வேலூர்: இரண்டு கோடி பேருக்கு இலவச வீடு கட்டித் தரும் பிரதமர் மோடியின் திட்டத்தில் நியாயமாக வாங்கினால் இரண்டாயிரம் வீடுகள் பெற முடியும், ஆனால் தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வலிமையை வைத்து 30 ஆயிரம் வீடுகள் வரை பெற்றுத்தர முடியும் என்று ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

acs
author img

By

Published : Jul 31, 2019, 3:06 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வேலூர் தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரான புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று ஆம்பூர் அடுத்த மிட்டாளம், வெங்கடசமுத்திரம், பந்தேரப்பள்ளி சுற்றி வட்டார கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையில் ஈடுபட்ட ஏ.சி. சண்முகம்

அப்போது அவர் பேசுகையில், ‘மக்களுக்கு தான் வெற்றி பெற்று வந்தால், எனக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகளிலிருந்து வாரந்தோறும் ஒவ்வொரு தாலுக்காவிலும் மருத்துவ முகாம் நடத்தப்படும். பிரதமர் மோடி இரண்டு கோடி பேருக்கு வீடு கட்டித் தருவதாக கூறியுள்ளார். அந்த திட்டத்தில் நியாயமாக வாங்கினால் இரண்டாயிரம் வீடுகள் அளிக்கப்படும். ஆனால் நான் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதால் தொகுதிக்கு 5000 முதல் 30,000 இலவச வீடுகள் பெற்றுத்தர முடியும். நான் மக்களுக்கு நல்லது செய்ய வருகிறேன். ஆனால் நீங்கள் மக்களிடமிருந்து எடுப்பவர்களுக்கு வாக்கு அளிக்கிறீர்கள்’ என கூறினார்.

Intro:
நான் கொடுக்க நினைக்கின்றேன் ஆனால் எடுப்பவர்களுக்கு நீங்கள் வாக்கு அளிக்கிறீர்கள், என ஆம்பூரில் அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் ஏ.சி.சண்முகம் பரப்புரை.


Body: வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வரும் 5 ஆம் தேதி நடைபெறுகிற நிலையில்,

மாவட்டந்தோறும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சியினர் தீவிர பரப்புரையில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இன்று ஆம்பூர் அடுத்த மிட்டாளம், வெங்கடசமுத்திரம், பந்தேரப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்,

இதில் அவர் மக்களுக்கு தான் வெற்றி பெற்று வந்தால், எனக்கு சொந்தமான மருத்துவ கல்லூரிகளிலிருந்து வார வாரம் தாலுக்கா தாலுக்காவாக மருத்துவமுகாம் அமைப்பேன், மற்றும் மத்தியில் கூறி 5000 இலவச வீடுகளை கட்டித்தர வலியுறுத்துவேன்,




Conclusion: மேலும் நான் மக்களுக்கு நல்லது கொடுக்க வருகிறேன், ஆனால் நீங்கள் மக்களிடமிருந்து எடுப்பவர்களுக்கு வாக்கு அளிக்கிறீர்கள்.

என பரப்புரை மேற்கொண்டார்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.