தஞ்சாவூரில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் திருவள்ளூவர் சிலைக்கு காவி துண்டு, ருத்திராட்ச மாலை ஆகியவை அணிவித்து பூஜை செய்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் கும்பகோணத்தில் வைத்து அவரை கைது செய்தனர்.
இதனைக் கண்டித்து வேலூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் இந்து மக்கள் கட்சியினர் அர்ஜூன் சம்பத்தை விடுதலை செய்யக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு... அடுத்த பிரச்னையை கிளப்பிய அர்ஜூன் சம்பத்!