வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இந்திய வான் விளையாட்டு அறிவியல் மையம் மற்றும் இஸ்லாமிய கல்லூரி இணைந்து நீர் சேமிப்பு, உலக பாதுகாப்பு, மரக்கன்றுகளை நடுதல் போன்றவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பசுமை மாரத்தான் போட்டி நடைபெற்றது.
ஊழல் தடுப்பு இயக்க தேசிய இளைஞரணி செயலாளர் சக்கரவர்த்தி மற்றும் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் இந்த பசுமை மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தனர்.
இந்த பசுமை மாரத்தான் போட்டியில் சேலம், வேலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.இதில் பெண்கள், ஆண்கள் பிரிவு குறிப்பிட்ட இலக்கை வைத்து போட்டியில் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் குறிப்பிட்ட இலக்கை அடைந்த ஆண், பெண் இருபாலருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
பெண்கள் பிரிவில் அரக்கோணம் தப்பூர் அரசுப்பள்ளி 7 ஆம் வகுப்பு மாணவி சௌமியா முதல் இடம் பிடித்தார்.ஆண்கள் பிரிவில் சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டிணம் கல்லூரி மாணவர் மாணிக்கவேல் ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ. 7000 மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: பந்து பவுண்டரிக்கு போனப்பிறகும் ரன் ஓடிய ஆஸி. வீரர்! கடமை உணர்ச்சிக்கு எல்லையேயில்லையா🤣