வேலூர், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளிக்க விருந்தனர்.
இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த சிலர், முன்னாள் ஊராட்சி செயலாளர் முரளி என்பவர் 100 நாள் வேலை திட்டம், பிரதம மந்திரி வீடு திட்டம் உள்ளிட்ட திட்டங்களில் பல்வேறு முறைகேடுகள் செய்திருப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிலமணிநேரம் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருண் பிரசாத் பேச்சுவார்த்தை நடத்தியதால் அனைவரும் அமைதி காத்தனர். இறுதியாக கிராம சபைக் கூட்டம் நடைபெற்று பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இதேபோல் ஆம்பூரையடுத்த விண்ணமங்கலம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள், விண்ணமங்கலம் பகுதியிலுள்ள ஏரி குடிமராமத்து பணியின் கீழ் தூர்வாரப்பட்டு வருகிறது.
இதற்காக ரூபாய் 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், முறையாக ஏரியில் பணிகள் நடைபெறவில்லையென்றும் ஒதுக்கப்பட்ட பணத்திற்கான கணக்கு கேட்டும் கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவலறிந்து அங்குவந்த ஆம்பூர் வட்டாட்சியர் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடச் செய்தார்.
இதையும் படிங்க: