வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கிரிகிரி பகுதியில் உள்ள சுல்தான் நகரில் 65 குடும்பங்களைச் சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள், பல ஆண்டுகளாக வசித்துவருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை வைத்துவந்தனர்.
அண்மையில் இவர்களின் கோரிக்கையை ஏற்ற அரசு இவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கியது. இதனையடுத்து தற்போது 65 குடும்பங்களுக்கும் தனியார் தொண்டு நிறுவனமான வேலூர் மாவட்ட ரோட்டரி சங்கமும், அரசும் இணைந்து பசுமை வீடுகளை கட்டித் தரவுள்ளன.
இதற்கான பூமிபூஜை வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகம் சுந்தரம் தலைமையில் இன்று (அக். 10) போடப்பட்டது. இதில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவரும் காட்பாடி சட்டப்பேரவை உறுப்பினருமான துரைமுருகன் உள்பட ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மாசடைந்த கொடைக்கானல் ஏரி : உரிய நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?