கரோனா தொற்று காலத்தில் மாணவர்கள் இணையவழி கல்வி பயில, அரசு அறிவித்த விலையில்லா இலவச 2 ஜிபி டேட்டா சிம் கார்டுகள் வழங்கும் விழா, தொரப்பாடியில் இயங்கும் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி மற்றும் பல் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் விழா அரங்கேறியது.
விழாவில் பல்வேறு நிறுவனங்களுடைய சிம் கார்டுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. வேலூர் மாவட்டத்தில் உள்ள பொறியியல், பல்தொழில்நுட்பம் மற்றும் கலை, அறிவியல் கல்லூரியில் பயிலும் 17,337 மாணவ, மாணவிகளுக்கு சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பத்திரிகையாளர்களிடத்தில் தெரிவித்தார்.
இதையும் படிங்க :
ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி