திருப்பத்தூர் மாவட்டம் கல்லுகுட்டை புதூர் பகுதியில் தமிழ்நாடு நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைஞர்கள் மாநில நல சங்கம் சார்பில் மாவட்ட கிளைச் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. மாநில துணை அமைப்பாளர் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் வேங்கைபிரபு பங்கேற்றார்.
நிகழ்ச்சிக்கு பின்னர் இயக்குநர் வேங்கைபிரபு செய்தியாளர்களிடம் கூறும்போது, "பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகள் நலிவுற்று மறைந்து வருகிறது. நாட்டுப்புற கிராமிய கலைகள் தெருக்கூத்து, தப்பாட்டம், பம்பை, சிலம்பாட்டம், மாடாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் உள்ளனர்.
பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, தற்போதுள்ள நிலையில் நாட்டுப்புற நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதிய தொகை அதிகப்படுத்த வேண்டும், கலை பண்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு அரசு அறிவிக்கும் விருது முறையாக சம்பந்தப்பட்ட தகுதிமிக்க கலைஞர்களுக்கு சென்று சேரவேண்டும், பேருந்து கட்டணம் சுங்கச் சாவடிகளிலும் விலக்கு அளிக்க வேண்டும்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நல சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: கழியல் ஆட்டம் மீட்டுருவாக்கல் முயற்சி! கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி!