வேலூர்: குடியாத்தம் அருகே காளியம்மன்பட்டியில் கண்ணன் என்பவருக்குச்சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் வேலை செய்யும் 30-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டு அறை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.
உடனடியாக தொழிலாளர்கள் அலறி அடித்து, வெளியே ஓடி வந்த நிலையில், மேலாளர் ரவி என்பவருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் நகர காவல் துறையினர், தீ விபத்து மற்றும் சேதாரம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தீக்குச்சிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: விடுதலைப்போரில் வீரத்தமிழகம் முப்பரிமாண ஒளி ஒலிக்காட்சி..சென்னையில் செப்.1 வரை நீட்டிப்பு