ETV Bharat / state

மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி மனு அளித்த விவசாயிகள்! - வேலூரில் விவசாயிகள் போராட்டம்

வேலூர்: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மின்சார சட்டத்திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

Farmers protest
Farmers protest
author img

By

Published : Jun 9, 2020, 6:37 PM IST

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு சார்பில், இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதற்குப் பதில் மானிய பணத்தை விவசாயிகளின் வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்துவது உள்ளிட்டவற்றை உள்டக்கிய மின்சார சட்டத்திருத்த மசோதா 2020ஐ மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

இருப்பினும், இந்த மசோதா விவசாயிகளின் நலனைப் பறிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்துவருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரி, வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனே உரிய பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் எனவும்; இலவச மின்சார உரிமையைத் தொடர்ந்து காப்பாற்றிட வேண்டும் எனவும் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இலவச மின்சார உரிமை பாதுகாப்பிற்கான விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தினர், வேலூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க: கரோனா: ராணுவத்தை வரவழைக்க கோரும் எம்.பி.,

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.