ETV Bharat / state

நிலுவை தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு ஆலைகள்... கட்டிடத் தொழிலாளிகளாக மாறிய விவசாயிகள் - கட்டிடத் தொழிலாளிகளாக மாறிய விவசாயிகள்

வேலூர்: நிலுவைத் தொகை வழங்காமல் கூட்டுறவு ஆலைகள் இழுத்தடிப்பதால் ஏமாற்றமடைந்த கரும்பு விவசாயிகள், விவசாயத்தை கைவிட்டு கட்டுமானத் தொழிலுக்கு மாறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Farmers become coolies because of vellore Co-operative mills do not pay the due amounts
author img

By

Published : Oct 11, 2019, 9:25 PM IST

தொழிற்சாலைகள் அதிகளவில் இல்லாத வேலூர் மாவட்டத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்துவருகிறது. நெல், மஞ்சள், கரும்பு, காய்கறிகள் உள்ளிட்டவை பிரதான விளைபொருளாக உள்ளன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் மூன்று லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்யப்படுகிறது.

உற்பத்தி செய்யப்பட்ட கரும்புகள் பெரும்பாலும் தமிழ்நாடு அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்காக வேலூர் மாவட்டத்தில் வேலூர் அம்முண்டி, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய 3 இடங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாடு அரசு ஒரு டன் கரும்புக்கு இரண்டாயிரத்து 750 ரூபாய் விலை நிர்ணயித்துள்ள நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சரிவர கரும்பிற்கான தொகையை வழங்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பல்வேறு விவசாயிகள் விவசாயம் செய்ய வழியில்லாமல் வேறு வேலைகளுக்குச் சென்றுவிட்டனர். பலர் விவசாயத்தை கைவிட்டு கட்டிடத் தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

நிலுவை தொகை வழங்காமல் இழுத்தடிக்கும் கூட்டுறவு ஆலைகள்

வேலூர் மாவட்டத்திலுள்ள மூன்று சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு 38 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்த தொகையை கேட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இருப்பினும் அரசு அலுவலர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து வேலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் கூறுகையில், "கரும்பு விவசாயத்தை நம்பித்தான் எங்களது குடும்பம் உள்ளது. கூட்டுறவு ஆலைகள் நாங்கள் வழங்கும் கரும்பிற்கு சரிவர பணம் தருவதில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியாமல் கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். ஒரு வருடம் கஷ்டப்பட்டு கரும்பு உற்பத்தி செய்து அதை விற்கும்போது பணம் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைகிறோம். தமிழ்நாடு அரசு உடனடியாக எங்களுக்கு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இதற்கிடையே நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து வேலூர் அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டக் களத்திற்கு சென்ற அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநர் கிரேஸ்லால் ரிண்டிகி பச்சாவு, கரும்பு விவசாயிகளின் இடையூறுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. தனக்கு மேலுள்ள உயர் அலுவலர்களிடம் முறையிடுங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

இந்திய ஆட்சிப்பணி பொருப்பில் உள்ள ஒரு அலுவலர் கரும்பு விவசாயிகளின் பிரச்னை குறித்து தெரியாது என அலட்சியமாக பதிலளித்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கட்டிடத் தொழிலாளிகளாக மாறிய விவசாயிகள்

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நம்பி ஏமாந்த கரும்பு விவசாயிகள் கட்டிட தொழிலாளியாக மாறிய அவலம்

அமைச்சர் அதிகாரிகள் முனையில் மேடையில் உறுதி அளித்த பிறகும் ரூ 38 கோடி நிலுவைத் தொகை வழங்காமல் கூட்டுறவு ஆலைகள் இழுத்தடிப்பு
Body:தமிழகத்தின் வெயிலூர் என்று அழைக்கப்படும் வேலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை இங்கு விவசாயம் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது நெல் மஞ்சள் கிழங்கு காய்கறிகள் உள்ளிட்டவை வேலூர் மாவட்டத்தில் அதிகம் விளைவிக்கப்படுகிறது அதேபோல் கரும்பு விவசாயமும் இங்கு அதிக அளவில் செய்யப்படுகிறது வேலூர் மாவட்டத்தில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் டன் கரும்பு உற்பத்தி செய்கிறது இந்த கரும்பு விவசாயிகள் தமிழக அரசின் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை விற்பனை செய்து வருகின்றனர் இதற்காக வேலூர் மாவட்டத்தில் வேலூர் அம்முண்டி, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய 3 இடங்களில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் இயங்கி வருகின்றன தமிழக அரசு ஒரு டன் கரும்புக்கு ரூ. 2750 விலை நிர்ணயித்துள்ளது இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சரிவர கரும்பிற்கான தொகையை வழங்காததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக வேலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு பாக்கித் தொகை வழங்கப்படாமல் உள்ளது இதனால் பல்வேறு விவசாயிகள் பிழைப்புக்கு வழியில்லாமல் வேறு வேலையை தேடி சென்ற அவலம் தற்போது ஏற்பட்டுள்ளது அதன்படி பலர் விவசாயத்தை விட்டுவிட்டு கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வருகின்றனர் பொதுவாக கரும்பு உற்பத்தி செய்ய ஒரு வருடங்கள் காலஅவகாசம் தேவைப்படுகிறது இந்த ஒரு வருடத்தில் விவசாயிகள் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் கரும்பை உற்பத்தி செய்கின்றனர் குறிப்பாக தோட்டத்தை சீரமைப்பு, அதற்கான ஆள் கூலி தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு நடுவே கரும்பை உற்பத்தி செய்து அதற்கான பலனை அடைய முடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 3 சர்க்கரை ஆலைகளில் மொத்தம் ரூ 38 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட வேண்டியுள்ளது இந்த தொகையை கேட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர் இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் கே சி வீரமணி வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் கிரேஸ்லால் ரிண்டிகி பச்சாவு ஆகியோர் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்குள் வேலூர் மாவட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படும் என மேடையில் வைத்து உறுதியளித்தனர் ஆனால் ஆகஸ்ட் மாதம் கடந்து தற்போது வரை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்துவரும் கரும்பு விவசாயிகளுக்கு சுமார் நான்கு முதல் ரூ.8 லட்சம் வரை கூட்டுறவு ஆலைகள் பாக்கி வைத்துள்ளது இதனால் அடுத்த கட்டமாக கரும்பு பயிரிட முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் இதுகுறித்து வேலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் கூறுகையில், "கரும்பு விவசாயத்தை நம்பித்தான் எங்களது குடும்பம் உள்ளது கூட்டுறவு ஆலைகள் நாங்கள் விளங்கும் கரும்பிற்கு சரிவர பணம் தருவதில்லை இதனால் விவசாயம் செய்ய முடியாமல் கூலி வேலைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம. ஒரு வருடம் கஷ்டப்பட்டு கரும்பு உற்பத்தி செய்து அதை விற்கும்போது பணம் கிடைக்காததால் மிகுந்த ஏமாற்றம் அடைகிறோம் எனவே தமிழக அரசு உடனடியாக எங்களுக்கு நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேதனையுடன் தெரிவித்தனர் இதற்கிடையில் நிலுவைத் தொகை வழங்காததை கண்டித்து வேலூர் அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் அப்போது போராட்ட களத்திற்கு சென்ற அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலான இயக்குனர் கிரேஸ்லால் ரிண்டிகி பச்சாவு அளித்த பதிலை கேட்டு கரும்பு விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர் அதாவது, எனக்கு இந்த பிரச்சினை குறித்து எதுவும் தெரியாது நான் மேலாண் இயக்குனர் தான் எனக்கு மேல் உள்ள உயர் அதிகாரிகளிடம் நீங்கள் முறையிடுங்கள் என்று அலட்சியமாக பதில் அளித்துள்ளார் இந்திய ஆட்சிப்பணி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி கரும்பு விவசாயிகளின் பிரச்சினை குறித்து தெரியாது என அலட்சியமாக பதிலளித்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதுConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.