வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நேற்று(மார்ச். 10) ரேண்டம் (Random) முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலூர், காட்பாடி, அனைக்கட்டு, கேவிகுப்பம், குடியாத்தம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கு அனுப்பும் பணி தொடங்கியது.
தொகுதிகளுக்கு அனுப்பப்பட்ட கருவிகளின் எண்ணிக்கை பின்வருமாறு
தொகுதி | வாக்குச்சாவடிகள் | வாக்களிக்கும் கருவிகள் | கட்டுப்பாட்டு கருவிகள் | விவிபாட் கருவிகள் |
காட்பாடி | 349 | 419 | 419 | 450 |
வேலூர் | 364 | 437 | 437 | 466 |
அனைக்கட்டு | 351 | 421 | 421 | 453 |
கேவிகுப்பம் | 311 | 373 | 373 | 401 |
குடியாத்தம் | 401 | 490 | 490 | 506 |
மொத்தம் | 1,783 | 2,140 | 2,140 | 2,296 |
அனைத்து கருவிகளும் லாரிகள் மூலம் அந்தந்த தாலுக்கா அலுவலகங்களுக்கு, தேர்தல் அலுவலர்களின் மேற்பார்வையில் அனுப்பி வைக்கப்பட்டன.
இதையும் படிங்க: வன்னியர் உள் இடஒதுக்கீடுக்குத் தடை கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்ற அமர்வுக்கு மாற்றம்!