தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விழாவான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுடன் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.
இவ்விழா குறித்து மாணவர்கள் கூறுகையில், நாங்கள் குடும்பத்தோடு பொங்கல் திருவிழாவை கொண்டாடுவதைவிட எங்கள் பள்ளியில் உடன் பயிலும் மாணவ மாணவிகளுடனும், ஆசிரியர்களுடன் ஒன்று சேர்ந்து சமவத்துவ பொங்கல் வைத்து கொண்டாடுது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதில் நடத்தப்படும் போட்டிகள் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது என்றனர்.
அதுமட்டுமின்றி எங்களது பள்ளியின் தலைமையாசிரியர் இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இந்தப் பதவியில் பொறுப்பேற்றார். அப்போது இருந்தே அவர் தன் சொந்த பணத்தைக் கொண்டு பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்துவருவதாகவும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'பொதுமக்கள்தான் எனக்கு முதல் உளவுத்துறை'