ETV Bharat / state

தமிழ்நாடு-ஆந்திர எல்லையில் 1.5 லட்சம் ரூபாய் பறிமுதல் - கணக்கில் காட்டப்படாத 1.5 லட்சம் பறிமுதல்

தமிழ்நாடு ஆந்திர எல்லையில் கணக்கில் காட்டப்படாத ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாயினை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Election flying squads 1.5 lakh confiscated at Tamil Nadu-Andhra border

author img

By

Published : Mar 7, 2021, 1:51 PM IST

வேலூர்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேலூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட தமிழ்நாடு-ஆந்திர எல்லையான கிருஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் சங்கரன் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று(மார்ச். 06) இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வெங்கடய்யா(61) என்பவர் நெல்லூரிலிருந்து வேலூர் நோக்கி ஆந்திர பதிவெண் கொண்ட காரில் வந்துள்ளார். அவரை நிறுத்தி சோதனை செய்ததில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் ரொக்கம் இருப்பது தெரியவந்தது. அவரிடம் பணத்திற்கு உரிய ஆவணம் எதுவும் இல்லாததால் அவரிடமிருந்த ஒரு லட்சத்து 56 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து காட்பாடி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.