ETV Bharat / state

மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம்! - ass marraiage

வேலூர்: திருப்பத்தூர் அருகே மழை வேண்டி 46 கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இணைந்து கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தனர்

மழை வேண்டி கழுதைக்கு கல்யாணம்!
author img

By

Published : Aug 13, 2019, 9:52 PM IST

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் மலை சூழ்ந்த பகுதியாக இருந்தும் கடந்த ஓராண்டு காலமாக முறையாக மழை பெய்யாததால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வருகின்றன.

மழை வேண்டி கழுதைக்கு கல்யாணம்! திருப்பத்தூரில் நடந்த வினோதம்!
இந்த கடும் பஞ்சத்தை போக்கும் வகையில் திருப்பத்தூர் அடுத்த கந்தலி, கும்பிடிகாம்பட்டி ஊராட்சி வட்டத்தில் உள்ள 46 கிராம மக்கள் ஒன்றுகூடி மழை வேண்டி பஞ்சக் கல்யாணி என்றழைக்கப்படும் பெண் கழுதைக்கும், ஆண் கழுதைக்கும் திருமணம் நடத்தி ஊர்வலமாக அழைத்துவந்தனர்.
இந்த திருமண நிகழ்வில் 46 கிராம மக்கள் சார்பில் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அறிவியல் வளர்ச்சி கண்ட இந்த காலத்திலும் கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்துவைத்தால் நல்ல மழை பொழியும் என்பது தங்களது ஐதீகம் என்று ஊர் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.

Intro:
திருப்பத்தூர் அருகே மழை வேண்டி 46 கிராமத்தை சேர்ந்த மக்கள் கழுதைக்கும் கழுதைக்கும் திருமணம் செய்து வைத்த வினோதம்....

Body:
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், என்றாலே மலை கிராமங்கள் நிறைந்த பகுதியாகும்,

குறிப்பாக திருப்பத்தூரை சுற்றி ஜவ்வாது மலை, ஏலகிரி மலை, ஆந்திர மாநில எல்லையொட்டிய மலைகள் இப்படி மலைகள் நடுவில் அமைந்துள்ளது திருப்பத்தூர்,

ஆனால் கடந்த ஓராண்டாக முறையான மழை பெய்யாததால், குடிநீர் பஞ்சம், விவசாயத்திற்கு போதிய நீர் வசதியில்லை, மேலும் மலைப்பகுதியில் வசிக்கும் வனவிலங்குகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி மக்கள் வசிக்கும் பகுதிகளில் தஞ்சம் அடைகின்றன,

இந்த கடும் பஞ்சத்தை போக்கும் வகையில் திருப்பத்தூர் அடுத்த கந்தலி கும்பிடிகாம்பட்டி ஊராட்சி முருகன் வட்டத்தில் 46 கிராம மக்கள் ஒன்று கூடி மழை வேண்டி நூதனமுறையில் பஞ்சக்கல்யாணி என்றழைக்கப்படும் பெண் கழுதைக்கும் ,ஆண் கழுதைக்கும் இந்துக்கள் முறைப்படி பாரம்பரிய வகையில் வகையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்ட, பின்னர் ஆண் கழுதையிற்கும் , பெண் கழுதையிற்கும் ஆண் வீட்டார் சார்பிலும் ,பெண் வீட்டார் சார்பிலும் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக அழைத்துவரப்பட்டு முருகன் வட்டத்தில் அமைந்துள்ள முருகன் கோவிலில் ஆண் கழுதைக்கும், பெண் கழுதைக்கும் முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

Conclusion: இந்த திருமண நிகழ்வில் 46 கிராம மக்கள் சார்பில் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

அறிவியல் வளர்ச்சி கண்ட இந்த காலத்தில்

பாரம்பரிய வகையில் கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்துவைத்தால் நல்ல மழை பொழியும் என்பது தங்களது ஐதீகம் என ஊர் பெரியவர்கள் தெரிவிக்கின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.