வேலூர்: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுகவை சங்கி கட்சி எனக் கூறி செருப்பை தூக்கி காட்டினார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், சீமானின் இச்செயல் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், திமுக மீது தொடர்ந்து அவதூறுகளையும், அரசியல் அநாகரீகத்தையும் அரங்கேற்றி வரும் சீமானை உடனடியாக கைது செய்யுமாறு வேலூர் மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தனியார் நிறுவன பெண் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்