ETV Bharat / state

காட்பாடி தொகுதியை இளைஞர்களிடம் ஒப்படைக்கபோகிறேன் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்

காட்பாடி தொகுதியை இளைஞர்களிடம் ஒப்படைக்கப்போவதாக திமுக பொதுசெயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக பொதுசெயலாளர் துரைமுருகன்
திமுக பொதுசெயலாளர் துரைமுருகன்
author img

By

Published : Mar 16, 2021, 12:35 PM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று(மார்ச். 15) நடைபெற்றது. இதில் அத்தொகுதி வேட்பாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார்.

"காட்பாடி தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறேன். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 12 ஆவது முறையாக போட்டியிடுகிறேன். இந்த தொகுதியை கோவிலாக பார்க்கிறேன். அதனால் தொகுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்துள்ளேன். இருப்பினும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க வேண்டும்.

மேலும் தொழில்பேட்டையை அமைத்து, தொகுதி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வாங்கி தர வேண்டும் என்ற ஆசை உள்ளது. எனது நீண்ட நாள் கனவை நிறைவேற்றியே தீருவேன்.

காட்பாடி தொகுதியில் 12, 13வது முறை என தொடர்ந்து போட்டியிடுவதா? இளைஞருக்கு வழி விட வேண்டாமா? என்ற எண்ணம், எனக்குள் மீண்டும் மீண்டும் வந்துபோகிறது.

எனவே, தேர்தலில் எந்த சகோதரர் அற்புதமாக பணியாற்றி நல்லெண்ணத்தை பெறுகிறாரோ, அவருக்கு தொகுதியை விட்டுக்கொடுக்க முடிவு செய்துள்ளேன்.

திமுக பொதுசெயலாளர் துரைமுருகன்

இங்கு போட்டியிடும் வேட்பாளர் சாதாரணவர் என்று நினைத்துவிடாதீர்கள்.முகத்தை பார்த்து மக்கள் ஓட்டு போடுவதில்லை. கட்சியின் சின்னத்தை பார்த்து தான் ஓட்டு போடுகிறார்கள்.

ஆகவே யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. பயத்தோடு, கவனமாக பணியாற்ற வேண்டும். போட்டி எனக்கும் மற்றோருவருக்கும் அல்ல, கட்சிகளின் சின்னங்களுக்கு இடையே தான்" என்றார்.

கூட்டத்தில், காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட தோழமை கட்சியினர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: பொள்ளாச்சி ஜெயராமன் மீது சமூக வலைதளங்களில் அவதூறு: திமுகவினர் 4 பேர் மீது வழக்குப் பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.