ETV Bharat / state

வேலூர் ஐடி ரெய்டில் கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு?

வேலூர்: திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் நடந்த வருமானவரித் துறை சோதனையில் 11 கோடியே 48 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

murugan
author img

By

Published : Apr 2, 2019, 8:41 AM IST

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது சகோதரி வீடு மற்றும் கடையில் நேற்று அதிகாலை 5:30 மணி முதல் வருமானவரித் துறையினர் ஆயுதம் ஏந்திய சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து திமுக ஒன்றிய செயலாளர் பெருமாள் வீடு, காட்பாடியில் உள்ள துரைமுருகன் உதவியாளர் அஸ்கர் அலி வீடு, மற்றும் காட்பாடியில் இயங்கிவரும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் நடத்திவரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

துரைமுருகன் வீடு சோதனை

இதில் பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் சகோதரி வீட்டிலிருந்து சுமார் 11 கோடியே 48 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் 19 அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு சென்னையில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்திற்கு காவல் துறையினர் பாதுகாப்புடன் வேன் மூலம் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

மேலும் துரைமுருகன் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவடைந்ததாக வருமானவரித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Intro: வேலூரில் உள்ள துரைமுருகன் மற்றும் அவரது உறவினர்கள் வீடு மற்றும் கல்லூரியில்(01.04.2019) நேற்று காலை 5:30 மணிக்கு தொடங்கிய வருமான வரித்துறையினரின் சோதனை (02.04.2019) முன்னிரவு 2:30 மணிக்கு நிறைவடைந்தது.

இச்சோதனையில் 11 கோடியே 48லட்சம் பணம் கைப்பற்றபட்டதாக வருமானவரித்துறையினர் தகவல்.

Body:வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள தி.மு.க பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு, அவரது அக்கா வீடு மற்றும் கடையில் நேற்று (01.04.2019) அதிகாலை 5:30 மணி முதல் வருமான வரித்துறையினர் ஆயுதம் ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து காட்பாடி வஞ்சூரில் உள்ள தி.மு.க ஒன்றிய செயலாளர், பெருமாள் வீடு, காட்பாடியில் உள்ள துரை முருகன் உதவியாளர் அஸ்கர் அலி வீடு, மற்றும் காட்பாடியில் இயங்கிவரும் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் நடத்திவரும் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியிலும் 10 பேர் கொண்ட குழுவினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பள்ளிகுப்பம் பகுதியில் உள்ள பூஞ்சோலை சீனிவாசன் அக்கா வீட்டிலிருந்து சுமார் 11கோடியே 48லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது, மேலும் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்கள் 19 அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு சென்னை உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் வேன் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

Conclusion: மேலும் துரைமுருகன் சம்பந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவடைந்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.