ETV Bharat / state

‘தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய மசூதி’ - நகை தொழிலாளி அசத்தல்!

வேலூர்: ரமலான் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க அடிப்படையில் தேவன் என்பவர் தங்கம், வெள்ளி ஆகியவற்றைக் கொண்டு பள்ளிவாசலை வடிவமைத்து அசத்தியுள்ளார்.

அசத்தும் நகை தொழிலாளி
author img

By

Published : Jun 5, 2019, 11:56 AM IST

வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவன். இவர் கடந்த 30 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தன் தொழிலில் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதன்முதலாக இந்திய வரைபடத்தைத் தங்கத்தால் செய்து, பின்னர் இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பையை வென்றபோது, அதன் நினைவாக கிரிக்கெட் மட்டையைத் தங்கத்தால் செய்து தனது பணியைத் தொடங்கினார்.

பின்னர், அப்துல் கலாமின் தீவிர ரசிகரான இவர், அவர் நினைவாக ராக்கெட் ஒன்றைத் தங்கத்தால் செய்து அவருக்குப் பரிசாக அளித்தபோது அதை அப்துல்கலாம் மறுத்துவிட்ட காரணத்தால் அதை அருங்காட்சியகத்தில் வைத்தனர். இதற்கிடையே, மத ஒற்றுமைக்காகப் பொங்கல் பண்டிகைக்குப் பானை, கரும்பு போன்றவற்றையும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக கிறிஸ்துமஸ் குடிலும், ரமலான் பண்டிகைக்கு மசூதி செய்ததாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.

அசத்தும் நகை தொழிலாளி
அந்த வகையில், ஈகை திருநாளான ரமலான் பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் இத்தருணத்தில், இரண்டு நாட்கள் உழைத்து 6.5 கிராம் தங்கம், 35 கிராம் வெள்ளி கொண்டு பள்ளிவாசலை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இவரது இந்த சாதனை பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.

Intro: ஆம்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க அடிப்படையில் தேவன் என்பவர் தங்கம் மற்றும் வெள்ளியிலான பள்ளி வாசலை அமைத்து அசத்தல்.

Body: வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர் தேவன் நகை 30 ஆண்டுகளாக நகை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் தன் தொழிலில் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் முதன்முதலாக இந்திய வரை படத்தை தங்கத்தால் செய்து பின்னர் இந்தியா கிரிக்கெட் போட்டில் உலககோப்பையை வென்ற போது அதன் நினைவாக கிரிக்கெட் மட்டையை தங்கத்தால் செய்து தனது பணியை துவக்கினார்.

பின்பு அப்துல்காலாமின் தீவிர ரசிகரான இவர் அவர் நினைவாக ராக்கெட் ஒன்றை தங்கத்தால் செய்து அவருக்கு பரிசாக அளித்த போது அதை அப்துல்கலாம் மறுத்துவிட்ட காரணத்தால் அதை மியூசியத்தில் வைத்தனர்.

பின்பு இவர் மத ஒற்றுமைக்காக பொங்கல் பண்டிகையிற்கு பானை மற்றும் கரும்பு போன்றவற்றையும் கிருஸ்மஸ் பண்டிகைக்காக கிருஸ்மஸ் குடிலும் ரம்ஜான் பண்டிக்கை முன்னிட்டு மசூதி செய்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பின்பு இந்த மசூதியை அமைப்பத்தற்கு இரண்டு நாட்கள் உழைத்து 6.5 கிராம் தங்கம் மற்றும் 35 கிராம் வெள்ளி கொண்டு பள்ளிவாசலை அமைத்துள்ளார்.

Conclusion: மேலும் தனது நுண்ணிய திறமையால் நாட்டின் வரலாற்று சிறப்புகளை தங்கம் மற்றும் வெள்ளி கொண்டு நுண்ணிய அளவில் படைத்து கின்னஸ் சாதனை புரிவதே தனது லட்சியம் என பெருமையுடன் தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.