ETV Bharat / state

வேலூரில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு; ஒரே நாளில் 227 பேர் மருத்துவமனையில் அனுமதி! - வேலூர் காய்ச்சல் பாதிப்பு

Dengue in vellore: வேலூரில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒரேநாளில் 227 பேர் காய்ச்சலுக்கும் மற்றும் 8 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வேலூரில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு…ஒரே நாளில் 277 பேர் மருத்துவமனையில் அனுமதி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 8:54 AM IST

வேலூரில் அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு…ஒரே நாளில் 277 பேர் மருத்துவமனையில் அனுமதி

வேலூர்: தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், வேலூர் மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், 8 பேர் டெங்கு காய்ச்சலுக்கும், 227 பேர் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வேலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த பருவ மழை காரணமாக பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகளுக்கு அதிகளவில் சளி, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.

அந்த வகையில், வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.29) ஒரே நாளில் 227 பேர் தீவிர காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 92 பேரும், குடியாத்தத்தில் 10 பேரும், பேரணாம்பட்டில் 2 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 123 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 5 பேரும், தனியார் மருத்துவமனையில் 3 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகரித்து வரும் காய்ச்சல் பாதிப்புகளைத் தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை, குடியாத்தம், பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவுவம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுவதாவது, “வேலூர் மாவட்டத்தில் காய்ச்சல், டெங்கு பரவலைத் தடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் களப்பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில், “டெங்கு, காய்ச்சல் அதிகம் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் ஆர்ஆர்டி குழுவினர் ஆய்வு செய்து, சுகாதாரப் பணிகளில் ஈடுபடுகின்றனர். தவிர சனிக்கிழமைதோறும், வேலூர் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களும் காய்ச்சல், டெங்கு பாதிப்புகளைத் தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என்றனர்.

இதையும் படிங்க: தென்காசியில் அதிரகரிக்கும் ப்ளு காய்ச்சல் தொற்று.. 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.