வேலூர் மாவட்டத்தில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை அரசு, தனியார் மருத்துவர்கள், செவிலியர், காவலர்கள், பொதுமக்கள் என 122 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தனர்.
இந்நிலையில் நேற்று 3, 7 வயதுடைய இரு சிறுவர்கள் உள்பட 6 பேருக்கு கரோனா தீநுண்மி பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 43 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: காஷ்மீரில் 28 சிஆர்பிஎஃப் அலுவலர்களுக்கு கரோனா உறுதி