வேலூரில் கரோனா நோய்த்தொற்றால் இதுவரை 1553 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சத்துவாச்சாரியை சேர்ந்த 73 வயது முதியவர், சங்கரன்பாளையத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஆகிய இருவர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
இதனால் வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரை 410 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: ஈரானில் சிக்கித் தவித்த இந்தியர்கள்: கப்பல் மூலம் நாடு திரும்பினர்!