தமிழ்நாட்டில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது. இருந்தும் ஒரு சில மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 157 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாவட்டத்தில் மொத்தமாக இதுவரை 14 ஆயிரத்து 338 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 ஆயிரத்து 870க்கும் மேற்பட்டார் குணமடைந்துள்ளனர். இதுவரை 214 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சையில் இன்று 190 பேருக்கு கரோனா!