ETV Bharat / state

வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்! - நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம்

வேலூர்: மத்திய மாநில அரசுகளை எதிர்த்து நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

communist
communist
author img

By

Published : Jan 4, 2020, 11:38 PM IST

வேலூர்

தமிழ்நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித்து ஜன.8ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகிறது.

இந்நிலையில், வேலை நிறுத்தத்தை ஆதரித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிம்புதேவன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

திண்டுக்கல்

கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் பொருளாதார மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகல்நகர் பகுதியில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசிற்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (விடுதலை) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூர்

கோயம்புத்தூரில் சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் இணைந்து கோவை சிவானந்தா காலனி பவர்ஹவுஸ் முன்பு வேலைநிறுத்த ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Intro:வேலூர் மாவட்டம்

பொது வேலை நிறுத்தத்தை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்Body:அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மத்திய மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து வரும் 8ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தை ஆதரித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிம்புதேவன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.