வேலூர் மாநகருக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்கள் காலையும், மாலையும் பள்ளி சென்று திரும்ப போதிய பேருந்து வசதி இன்றி தவித்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
இந்நிலையில் இன்று மாலை (டிச. 7) வேலூர் அண்ணா சாலையில் சென்ற அரசுப்பேருந்து ஒன்றில் பள்ளி மாணவர்கள் பேருந்துக்கு வெளியே தொங்கியபடி மிக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். அப்போது அதே சாலையில் சென்றுகொண்டிருந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி பயணம் செய்வதைப் பார்த்து, பேருந்தை மறித்து நிறுத்தியுள்ளார்.
பின்னர் பேருந்தின் நடத்துநர் மற்றும் ஓட்டுநருக்கு மாணவர்களை படியில் தொங்கவிட்டு பயணம் செய்ய விடக்கூடாது என எச்சரிக்கை விடுத்தார். மேலும் மாணவர்களிடமும் ஆபத்தான முறையில் பயணம் செய்யக் கூடாது என்று அறிவுரை வழங்கினார். மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மாணவர்களே வராத பள்ளி... தலைமை ஆசிரியர் மட்டும் வந்து செல்லும் விநோதம்