ETV Bharat / state

வேலூரில்  டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழிப்பு!

வேலூர்: டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் வேலூர் பகுதியில் மேலும் ஒரு சிறுமி டெங்குவால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

children death affect dengue fever
author img

By

Published : Oct 22, 2019, 2:06 PM IST

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அறிவரசன் என்பவரின் இளையமகள் திவ்யா(12) அவரது சகோதரி புவியரசி(15) ஆகியோருக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் இருவரையும் பெற்றோர் அனுமதித்துள்ளனர். அங்கு காய்ச்சல் குணமாகததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் சிகிச்சைப் பலனின்றி அங்கு திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரி புவியரசு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் சிறுமியின் பெற்றோர் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழிப்பு

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டத்தில்தான் அதிகளவில் டெங்கு பாதிப்பு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த ஆண்டு இதுவரை 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், டெங்குவால் சிறுவர்கள் அடுத்தடுத்து உயரிழப்பதால், தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வேலூர் மாவட்டத்தில் டெங்குவைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க:

டெங்குவிற்கு 4 வயது சிறுமி உயிரிழப்பு: பள்ளி நிர்வாகத்திற்கு 1 லட்சம் அபராதம்

Intro:வேலூர் மாவட்டம்

வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வரும் நிலையில் மேலும் ஒரு சிறுமி டெங்குவால் பலி பொதுமக்கள் பீதிBody:தமிழகத்தில் பருவமழை பெய்து வரும் நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களாக டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் மக்களிடையே வேகமாக பரவுகிறது மர்ம காய்ச்சல் காரணமாக நாள்தோறும் அரசு மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கான பேர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர் இருப்பினும் டெங்குவின் தீவிரத்தை ஆரம்பத்திலே உணராத அதிகாரிகள் "கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்" என்ற பழமொழி அடிப்படையில் உயிரிழப்பு ஏற்பட்ட பிறகே டெங்குவை தடுக்க அதிகாரிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர் அதன்படி சில தினங்களுக்கு முன்பு வேலூர் மாவட்டம் வெட்டுவாணம் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமி நட்சத்திரா டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அதைத்தொடர்ந்து டெங்குவை தடுக்க வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார் இந்த நிலையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு மேலும் ஒரு சிறுமி உயிரிழந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது அதாவது வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல் ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அறிவரசன் என்பவரின் இளையமகள் திவ்யா(12) மற்றும் அவரது அக்கா புவியரசி(15) ஆகியோருக்கு கடந்த 5 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் திவ்யா மற்றும் புவியரசியை பெற்றோர்கள் அனுமதித்துள்ளனர் அங்கு காய்ச்சல் குணமாகததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் ஆனால் சிகிச்சை பலனின்றி அங்கு திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார் அவரது சகோதரி புவியரசு தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் இந்தச் சம்பவம் சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக வேலூர் மாவட்டத்தில் தான் அதிகளவில் டெங்கு பாதிப்பு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார் குறிப்பாக இந்த ஆண்டு இதுவரை 900க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார் இந்த சூழலில் அடுத்தடுத்த டெங்குவால் சிறுவர்கள் உயரிழந்து வருவதால் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வேலூர் மாவட்டத்தில் டெங்குவை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.