வேலூர்: ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கலவகுண்டா அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக உபரி நீரானது பாலாற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று (நவ.19) வரலாறு காணாத வகையில் கடந்த 163 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் 1.4 லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
இதன் காரணமாக பாலாற்றின் கரையோரம் இருக்கக்கூடிய பெரும்பாலான கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. மேலும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தரை பாலங்கள் மூழ்கின. இதன் ஒரு பகுதியாக இன்று (நவ.20) மாதனூர், குடியாத்தத்தை இணைக்கக்கூடிய முக்கிய தரைப்பாலத்தின் இருபுறத்திலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
தரைப்பாலம் உடைப்பு
பாலாற்றின் கரையோர மரங்கள் வெள்ளப்பெருக்கில் அடித்து வரப்பட்டு தரைப்பாலத்தில் உள்ள கண்களை அடைத்துக் கொண்டது.
இந்தப் பாலத்தில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விரைந்து இப்பாலத்தை சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மெரினாவில் போராட்டம் நடத்தினால் நடவடிக்கை - காவல் துறை எச்சரிக்கை