பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சர்ச்சை பேச்சுகளுக்கு பெயர் போனவர். இந்து மதம் மற்றும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை, பொது இடங்கள் என்று கூட பார்க்காமல் கடும் சொற்களை பதிவு செய்வது வழக்கம். இப்படி அவர் பேசி வருவதால், தமிழ்நாடு முழுவதும் உள்ள காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவாகி வருகிறது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் வேலூர் மாவட்டம், மேல்விஷாரம் பகுதி குறித்து சர்சைக்குரிய கருத்தை கூறியிருந்தார். இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் வேலூர் மாவட்ட மாணவரணி செயலாளர் சல்மான் ஆற்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.