பணப்பட்டுவாடா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடக்க இருந்த வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்கும்வரை வேலூர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு மாவட்ட ஆட்சியர் மனு அளித்துள்ளார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘தமிழ்நாடு வரலாறு காணாத வறட்சியைக் கண்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறைதான் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பெரும்பாலான நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் தரிசாகக் கிடக்கின்றன. இது போன்ற சூழலில் தேர்தல் நடத்தப்படுவது விவசாயிகளுக்கு எதிராக உள்ளது. எனவே, தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்த பின்னர் வேலூர் தேர்தலை நடத்த வேண்டும் இல்லையென்றால் தலைமைச் செயலகத்தில் தீ குளிப்போம்’ என்றார்.