வேலூர் மாவட்டம் காட்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி காட்பாடி கல்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது காட்பாடி ஒன்றியத்துக்குள்பட்ட எட்டாவது வார்டில் ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடுபவர் அம்பிகா, இவருக்கு மாற்று வேட்பாளராக ரேவதி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
மாற்று வேட்பாளர் ரேவதி மனுவை வாபஸ் வாங்க காட்பாடி ஊராட்சி ஒன்றியை அலுவலத்துக்கு வந்தபோது முக்கிய வேட்பாளர் அம்பிகாவிடமும், காட்பாடி தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்புமனுவை வாபஸ் பெறும் படிவத்தில் ஏமாற்றி கையெழுத்தி வாங்கியதாக கூறி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் அப்பு, அதிமுகவினர் வாக்குவதாம் செய்தனர்.
மேலும் இது திமுகவின் தூண்டுதலின் பெயரில் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதற்கிடையில்,வேலூர் திமுக மத்திய மாவட்ட செயலாளர் நந்தகுமார் அங்கு வந்தார். இதனைத்தொடர்ந்து அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்று ஒருகட்டத்தில் மோதலிலும் ஈடுப்பட்டனர். இவர்களை அங்கு பணியிலிருந்த காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி விலகிவிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து அலுவலர்கள் தரப்பில் கூறுகையில், தவறுதலாக வேட்பாளர் அம்பிகாவிடம் கையெழுத்து பெற்றுவிட்டதாகவும் அவரது பெயரை பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
காட்பாடி ஒன்றியம் எட்டாவது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் அம்பிகா என்ற வேட்பாளரின் மனுவை அரசு அலுவலர்கள் வாபஸ் பெற வைக்க கையெழுத்தி வாங்கியதாகவும், தேர்தலில் முறைகேடு நடக்க இருப்பதால் இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வேட்பாளர் அம்பிகா தேர்தல் ஆணையத்தில் இணையம் மூலம் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிங்க: நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டிருப்பேன் - இபிஎஸ்