ETV Bharat / state

ஸ்பிரே மூலம் மயக்க மருந்து அடித்து நகை, பணம் கொள்ளை!

வேலூர்: வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஸ்பிரே மூலம் மயக்க மருந்து அடித்து தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

File pic
author img

By

Published : Jun 8, 2019, 4:39 PM IST

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளாளனூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவர் பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். பாபு தனது வீட்டில் குடும்பத்தாருடன் உறங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் உறங்கி கொண்டிருந்தவர்களின் மீது ஸ்பிரே மூலம் மயக்க மருந்து அடித்து பீரோவில் இருந்து சுமார் 11 சவரன் தங்க நகைகள், வெள்ளி பெருட்கள், பணம் உள்ளிட்டவைகளை திருடி சென்றனர்.

இன்று காலை வழக்கம்போல எழுந்த பாபு, பீரோவை திறந்து பார்த்தபோது நகைகள், பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து பாபு நாட்றம்பள்ளி காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். வீட்டில் உறங்கி இருந்தவர்கள் மீது மயக்க மருந்து அடித்து நகை, பணம் திருடி சென்ற சம்பவம், அப்பகுதியில் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Intro: நாட்றம் பள்ளி அருகே மயக்க மருந்து தெளித்து 11 சவரன் 500 கிராம் வெள்ளி கொள்ளை.

Body: வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளாளனூர் பகுதியை சேர்ந்தவர் பாபு.

இவர் பெங்களூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர் வீட்டில் இரவு குடும்பத்தாருடன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த போது பக்கத்து வீட்டு மாடியில் இருந்து இவரது வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் உறங்கி கொண்டிருந்தவர்களின் மீது மயக்க மருந்து தெளித்து வீட்டில் இருந்த பீரோ சாவியை எடுத்து சுமார் 11 சவரன் தங்க நகை மற்றும் 500 கிராம் வெள்ளி 8 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.

விடியற்காலை எழுந்த பாபு பீரோ திறந்த அதிலிருந்த பொருட்கள் காணமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

Conclusion: உடனடியாக இது குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.