ETV Bharat / state

’10 ஆண்டுகளாக காய்ந்து கிடக்கும் திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் சுருட்டிவிடும்’ - அன்புமணி ராமதாஸ்

வேலூர்: அதிமுக கூட்டணிக் கட்சியான ’புரட்சி பாரதம்’ கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பரப்புரை மேற்கொண்டார்.

வேலூரில் அன்புமணி ராமதாஸ் பரப்புரை
வேலூரில் அன்புமணி ராமதாஸ் பரப்புரை
author img

By

Published : Mar 24, 2021, 8:36 AM IST

வேலூர் மாவட்டம், கே.வி. குப்பம் (தனி) தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணிக் கட்சியான புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியை ஆதரித்து, பாமக மாநில இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கே.வி.குப்பம் பேருந்து நிலையத்தில் நேற்று (மார்ச். 23) பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "இந்தத் தேர்தல் விவசாயிகளுக்காகவும் வியாபாரிகளுக்காகவும் நடக்கும் தேர்தல். நண்பர் ஜெகன் மூர்த்தியை அதிக வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

சமூக நீதியின் அடிப்படையில்தான் நம்முடைய கூட்டணி அமைந்துள்ளது. மு.க. ஸ்டாலிடனிடம் சமூகநீதி என்ன என்று கேட்டால் கிலோ எவ்வளவு என்று கேட்பார். அவருக்கு சமூக நீதி தெரியாது, சமத்துவம் தெரியாது, இட ஒதுக்கீடு தெரியாது, வரலாறு தெரியாது, கணக்கு கூட தெரியாது. முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை மட்டும் உள்ளது. அதுவும் நடக்கப் போவது கிடையாது. கலைஞர் கருணாநிதி இருந்தபோது இரண்டு பெரிய சமுதாயத்தை சேரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் இரு சமூகத்திற்கும் சண்டை மூட்டிவிட்டார்கள். இது எல்லாம் அரசியல் சூழ்ச்சி.

வேலூரில் அன்புமணி ராமதாஸ் பரப்புரை
பாமக நிறுவனர் ராமதாஸ் என்ன கோரிக்கை வைத்தாலும் முதலமைச்சர் அதை நிறைவேற்றி வருகிறார். அதிமுக ஆட்சி பெண்களுக்கு அமைதி தருகின்ற ஆட்சி, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்கள் சாலையில் நடமாட முடியாது, பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது. கொலை, கொள்ளை, நில அபகரிப்பு என்ற அனைத்தும் திமுகவிற்கு கை வந்த கலை. 10 வருடங்களாக திமுகவினர் காய்ந்து கிடக்கின்றனர். ஆட்சிக்கு வந்தால் அனைத்தையும் சுருட்டி மேய்ந்து விடுவார்கள். எனவே யார் வர வேண்டும், யார் வரக்கூடாது என்று சிந்தியுங்கள். நம் கூட்டணி வெற்றிபெற்றாக வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: 'இலங்கை தமிழர்களுக்கு துரோகம் இழைத்த மோடி அரசாங்கம்'- கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.