ETV Bharat / state

அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு! - வேலூர் செய்திகள்

Ma Subramanian inspection: அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ma subramanian inspection
மா சுப்பிரமணியன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 6:57 PM IST

Updated : Jan 7, 2024, 7:10 PM IST

வேலூர்: ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் புதியதாக கட்டப்பட்டு வரும் மருத்துவமனை கூடுதல் கட்டிடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (டிச.07) திறந்து வைத்தார்.

முன்னதாக நேற்று அவர், வேலூர் மாவட்டத்தின் வழியாக வந்து அணைக்கட்டு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு செய்தார். அங்கு மருந்தாளுநர் விடுமுறை சென்றிருந்ததும், பயிற்சி மருந்தாளுநரைக் கொண்டு நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவரை அழைத்த அமைச்சர், பயிற்சி மருந்தாளுநர் முறையாக மருந்துகளை அளிக்க முடியுமா? இனி இது போன்று நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவ அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், மருத்துவமனையில் மருந்து, மாத்திரைகள், தேவையான இருப்புகள் உள்ளதா எனக் கேட்டறிந்த அமைச்சர், தேவைப்படும் ஸ்டேஷனரி பொருட்களை உடனடியாக வாங்கிக் கொள்ளவும் மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை வருகைப் பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சர், அதில் யார் யார் கையொப்பமிட்டுள்ளனர், நேற்று எத்தனை ஊழியர்கள் மருத்துவமனைக்கு வந்தனர் என்பது குறித்தும் மருத்துவர்களிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணான பதில் அளித்ததால் வருகைப் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் மருத்துவமனை நிர்வாகம் குறித்தும், மருத்துவர்கள் சரியாக மருத்துவம் பார்க்கின்றனரா என்பது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், திமுக ஒன்றியச் செயலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: ஜெஎன்1 வகை தொற்றுக்கு மருத்துவமனைக்கு வர தேவையில்லாத நிலை இருக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Last Updated : Jan 7, 2024, 7:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.