திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மின்னூர் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலையில் நேற்று வாணியம்பாடியிலிருந்து ஆம்பூர் நோக்கி கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது.
கார் மின்னூர் அருகே சென்று வந்தபோது, சாலையை கடக்க இரு பெண்கள் முயன்றனர். இதையடுத்து அவர்கள் மீது மோதாமல் இருக்க, கார் ஓட்டுநர் காரை நிறுத்த முயன்றார்.
அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த கார், ஆம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோவின் பின்பக்கம் மோதியது.
இதில் ஆட்டோ அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள், சாலையை கடக்க முயன்ற இருபெண்கள், ஆட்டோவில் பயணம் செய்த இருவர் உட்பட ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் காயமடைந்தவர்களை ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.
இது குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய பாஸ்கர் வருமான வரி வழக்கு: இடைக்காலத் தடை விதித்து உத்தரவு