வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆம்பூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,
இஸ்லாமிய பெருமக்களை அதிமுகவிலிருந்து பிரித்து விடலாம் என ஸ்டாலின் நினைப்பதாகவும், அவர் பல்வேறு தவறான செய்திகளை உண்மைக்கு புறம்பாக பரப்பி கொண்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
அவருக்கு இந்த தேர்தல் ஒரு மிகப்பெரிய பாடமாக அமையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 2006ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த திமுக அரசு மின்சார தட்டுப்பாட்டை தீர்காத அரசாக இருந்தது.
ஓ.பி.எஸ் ஈ.பி.எஸ் நாட்டையே தீ வைத்து கொளுத்திவிட்டார்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார், ஆனால் உண்மையில் நீங்கள் தான் மாமன், மச்சான் சண்டையில் மதுரையில் தினகரன் பத்திரிக்கையை தீ வைத்து கொளுத்தினீர்கள்.
மேலும், தவறான வாக்குறுதிகளை மக்களிடையே கொடுத்து ஏமாற்றி வெற்றி பெற்று விட்டீர்கள். இந்த வெற்றி தற்காலிகமானது என்பதை புரிந்து கொள்ளுங்கள், இவ்வாறு துணை முதலமைச்சர் பேசினார்.