வேலூர்: காட்பாடி ரயில்வே மேம்பாலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக சீரமைப்பு பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தது. தற்போது பாலம் சீரமைக்கும் பணி முடிக்கப்பட்டு நேற்று முதல் இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பாலத்தின் மீது செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கனரக வாகனங்கள் ஜூலை 4ஆம் தேதிக்கு பிறகு பாலத்தின் மீது செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், காட்பாடி ரயில்வே மேம்பாலம் நீண்ட நாள்களாக திறக்கப்படாததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர் என கூறி, வேலூர் மாவட்ட அதிமுக மாநகர செயலாளராக உள்ள அப்பு தனது ஆதவரவாளர்களுடன் ரயில்வே மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி திறந்துள்ளார்.
இதனை தொடர்ந்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாக அப்புவை காட்பாடி காவல் துறையினர் நேற்று கைது செய்தனர். இதுகுறித்து வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் கூறிகையில், 'மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் அரசியல் நோக்கத்துடன் பாலம் திறக்கப்பட்டுள்ளது' என அதிமுகவினரின் செயலுக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.
இதையும் படிங்க: நகரமன்ற கூட்டத்திற்கு குப்பை தொட்டியுடன் வந்த அதிமுக உறுப்பினர்!!