திருப்பத்தூர் மாவட்டம் விசமங்களம் ஊராட்சியை அடுத்த கந்திலி வடக்கு ஒன்றிய பகுதியில் உள்ள அதிமுக, தேமுதிக, பாமக போன்ற இதர கட்சிகளிலிருந்த தொண்டர்கள் கந்திலி வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி மற்றும் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தசரதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மேலும், இதுகுறித்து கந்திலி ஒன்றியம் வடக்கு செயலாளர் அன்பழகன் கூறுகையில், ”நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மாவட்ட கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் என பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்த வெற்றியை ஸ்டாலினுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று வேலூர் மேற்கு மாவட்ட கந்திலி வடக்கு ஒன்றிய கிராமத்திலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் இதர கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்” என்றார்.
இதையும் படிங்க:நெற்பயிர்களை தீயிட்டுக் கொளுத்திய விவசாயி!