ETV Bharat / state

இரட்டை வேடம் போடுகிறது அதிமுக: முத்தரசன் குற்றச்சாட்டு

வேலூர்: முத்தலாக் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.

CPI
author img

By

Published : Jul 31, 2019, 3:02 AM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆம்பூரில் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், " வேலூர் தேர்தல் பொதுத்தேர்தலுடன் சேர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும். அவ்வாறு நடைபெற்றிருந்தால் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றிருப்பார். வேண்டுமென்றே இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பாலாறு, கர்நாடகாவில் உற்பத்தியாகி ஆந்திராவில் 33 கி.மீ. தொலைவு பயணிக்கிறது. இதில், ஆந்திர அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது.

முத்தரசன் பேட்டி

இதைத்தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படியானால் எதற்காக இந்த அரசு இருக்க வேண்டும்?

தற்போது தமிழ்நாட்டில் அன்றாட படுகொலைகள் நடைபெறுகின்றன. மேலும், ஆணவப் படுகொலைக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல் அலட்சிய கண்ணோட்டத்தோடு முதலமைச்சர் பதிலளிக்கிறார் .

அதுமட்டுமல்லாமல் அனைத்து பிரச்சனைகளுக்கும் அதிமுக இரட்டை வேடம் போடுகிறது. முத்தலாக் சட்டத்திற்கு ஓ.பி.எஸ் மகன் ஆதரித்துப் பேசுகிறார். ஆனால் ராஜ்ய சபாவில் நவநீதகிருஷ்ணன் எதிர்த்துப் பேசுகிறார், என்றார்.

Intro:

இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆம்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார்.

Body: வேலூர் மாவடத்தில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிற நிலையில் திமுக சார்பில், போட்டியிடும் கதிர் ஆனந்தை ஆதரித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;

வேலூர் தேர்தல் பொதுதேர்தலுடன் சேர்ந்து நடைபெற்றிருக்க வேண்டும் அவ்வாறு நடைப்பெற்றிருந்தால் திமுக சார்பில் போட்டியிடும் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றிருப்பார் என்றிருந்த நிலையில் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் அத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அண்ணா திமுக ஆதரவோடு ஒருவர் நிற்கிறார் ஆனால் அவர் வேரொரு கட்சியை சேர்ந்தவர்.

அவருக்கு ஆதரவாக முதல்வர் இங்கு தான் ஒரு விவசாயி என்றும் விவசாயத்தை பற்றி நன்கு தெரியும் ஆகவே தான் முதல்வராக இருப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என்று குற்றச்சாட்டை வைக்கிறார்.

மேலும் பேசிய அவர்

பாலாறு கர்நாடகாவில் உற்பத்தியாகி ஆந்திராவில் 33 கிலோ மீட்டர் தொலைவு பயணிக்கிறது, இதில் ஆந்திர அரசு 22 தடுப்பணைகளை கட்டியுள்ளது, இருந்தும் தற்போது 40 அடியாக உயர்த்தியுள்ளனர், இதை தடுத்து நிறுத்த தமிழக அரசு இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை,

இதற்கு வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள செங்கோட்டையன் அவர்கள் தாங்கள் என்ன அருவா எடுத்து செல்லமுடியுமா என செய்தியாளர்களிடையே கேட்கிறார்.

இதனை தடுக்க முடியாத அரசு எதற்கு இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

மேலும் தற்போது தமிழகத்தில் அன்றாட படுகொலைகள் நடைபெறுகிறது, தற்போது சேலத்தில் எடப்பாடியார் தொகுதியில் எங்களுடைய தோழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுவிட்டார்,

மேலும் குளித்தலையில் தந்தையும் மகனும் சமுதாய அக்கறையுடன் 150 ஏக்கர் குளத்தை பாதுகாக்க நீதிமன்றம் சென்றார் என்ற காரணத்திற்காக இருவரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இதுபற்றி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொலைகளும், கொள்ளைகளும் நடக்கத்தான் செய்யும் அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும் என்று கூறுகிறார், அதை கட்டுப்படுத்த தான் அரசு இருக்கிறது, அதை செய்யமாட்டோம் அதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னால் நீங்கள் எதற்கு ஆட்சியில் இருக்க வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

மேலும் ஆவணப்படுகொலைகள் நடைபெறுவது குறித்து முதல்வர் கூறுகையில் முந்தைய ஆட்சியிலும் நடைபெறுகிறது இப்போதும் நடைபெறுகிறது என இரும்பு கரங்களை கொண்டு ஒடுக்காமல் ஏதோ படுகொலைகளுக்கு ஆதரவு தெரிவிப்பது போல் அலட்சிய கண்ணோட்டத்தோடு பேசுகிறார், இப்படி பேசுபவர்கள் எதற்கு ஆட்சியில் இருக்க வேண்டும்,

அதுமட்டுமில்லாமல் எல்லா பிரச்சனைகளுக்கும் இரட்டை வேடம் போடுகிறது இரட்டை தலைமையுடைய ஆட்சி அதிமுக ஆட்சி.

முத்தலாக் சட்டத்திற்கு ஓ.பி.எஸ் மகன் ஆதரித்து பேசுகிறார், ஆனால் ராஜ்சபாவில் நவநீதகிருஷ்ணன் எதிர்த்து பேசுகிறார், இதில் எது சரி என்ற இரட்டை நிலையில் உள்ளது.

Conclusion: மக்களுக்கு எதிராக மத்திய அரசு எடுக்கும் முடிவிற்கு ஆதரவாக நிலையை மாநில அரசு மேற்கொள்கிறது.

என்று தெரிவித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.