ETV Bharat / state

இளைஞரின் கழுத்தில் இறுக்கப்பட்ட கயிறு: தரதரவென இழுத்துவந்த காளை! - vellore jallikattu

வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற எருது விடும் போட்டியில் மாட்டால் தொலைதூரம் இழுத்துவரப்பட்ட இளைஞர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்.

இளைஞரின் கலுத்தில் கயிறு இறுக்கி தர தர வென மண்ணில் இழுத்து வந்த காளை..!

author img

By

Published : Jan 15, 2022, 10:37 PM IST

வேலூர்: பொங்கல் திருநாளை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் அரசு அனுமதி பெற்று எருதுவிடும் போட்டிகள் நடைபெற்றன. வேலூர் அருகே மூஞ்சூர்பட்டு கிராமத்தில் இன்று நடைபெற்ற எருதுவிடும் போட்டியில் பார்வையாளராகக் கலந்துகொண்ட இளைஞர் ஒருவரின் கழுத்தில் அதிவேகமாக ஓடிய எருதின் கயிறு சிக்கிக்கொண்டு தெரு முழுவதும் இழுத்துச் சென்ற காட்சி பொதுமக்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் லத்தேரி அருகே பனமடங்கி கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் போட்டியைக் காணவந்த ஒருவரின் மீது அதிவேகமாக ஓடிவந்த எருது முட்டி ஓடிச் சென்றது. அருகேயிருந்த அனைவரும் அலறி அடித்து ஓடினர்.

எது எப்படியோ இன்று நடைபெற்ற எருதுவிடும் போட்டிகளில் கயிற்றில் சிக்கிக் கொண்ட இளைஞர் எழுந்து நடந்துசென்றார். மற்றொரு போட்டியில் மாடு முட்டியதில் இன்னொருவரும் எழுந்து நடந்து சென்ற அற்புதம் எருதுவிடும் போட்டியின் பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:பாலமேடு ஜல்லிக்கட்டு: 2ஆவது முறையாக பிரபாகரன் முதலிடம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.